18 June 2012


கம்பா நதி

கம்பா என்ற பெயருடைய நதி ஒன்று அந்தர் வாகினியாக (நில மட்டத்திற்குக் கீழே) நெல்லை நகரினூடாக ஓடுவதாக கர்ண பரம்பரைச்       ( செவி வழிச்)  செய்தி ஒன்று உண்டு. எநல்லையப்பர் கோவிலும் சந்தி விநாயகர் கோவிலும் இந்த நதியின் எதிர் கரைகளில் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்துடன் தொடர்புடைய அகத்திய முனிவர் ஒரு முறை சந்தியா கால பூசைக்காக இந்த ஆற்று மணலைப் பிடித்து உருவாக்கிய மூர்த்தியே சந்தி விநாயகர் மூல விக்ரகம். திருவாவடுதுறை ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஆலயத்தின் தல வரலாற்றுச் செய்தி இது. சந்தி விநாயகர் விக்ரக அமைப்பு பிற செதுக்கிய சிற்பங்களைப்போல இல்லா திருப்பதும் மணற் துகள்கள் மிகுந்து காணப்படுவதாகக் கூறப்படுவதும் நினைக்கத் தக்கது. நகரின் இந்தப் பகுதியில் தரை மண் உறுதியற்ற்றிருப்பதும், நிலத்தடி நீர் 30 அடிக்கும் குறைவாக இருப்பதும்,  கடினத் தன்மை குறைவாக இருப்பதும், நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் தீர்த்தக்கட்டங்கள் ஆழம் குறைவாக இருப்பதும் தொடர்புடைய செய்திகளாகக்  கருதுகிறேன். வழுக்கோடை அருகிலுள்ள காமாட்சி அம்மன் கோவிலினுள்ளிருக்கும் சுனை இந்த நீரோட்டத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

நெல்லையின் கம்பா நதி தாமிரபரணியின் ஒரு சிறு கிளை ஆறாக இருந்த்தா? இந்த நீரோட்டத்தின் தற்போதைய தன்மை என்ன? போக்கு எது? நிலத்தடி நீர்ச்சோதனைகளும் சாட்டிலைட்   ஆய்வுகளும் இந்த கேள்விகளுக்கு விடை தரலாம்.  

1 comment:

  1. Interesting- is it like the 'Saraswathi' River?

    ReplyDelete