1 June 2014

அன்னை பயங்கரி எம் பாரத தேவி!

இந்த அற்புதமான போஸ்டரை இணைய தளத்தில் கண்டெடுத்தேன்.



உண்மையில் இது ஆக்ஸ்போர்டு புத்தக நிறுவன நூல் ஒன்றின் முக அட்டை வடிவமைப்பு.

1962 - சீனப்போரின் போதைய இவ்வரைவு, தவறாக விடுதலை இயக்க காலத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக எண்ணுகிறேன்.  

நம் பண்டு பெரும் தேசத்தின்பால் பெருமித உணர்வூட்டும் இந்த ஓவியத்தின் அழகில் ஈடுபட்டேன்.... உணர்வில் ஈர்க்கப்பட்டேன்....

பௌத்த அசோகனின் மௌன சிம்மங்கள் சீறிக்கிளம்புவது அகிம்சை நெறிப் பிறழ்வா? அல்லது அரசியல் நிதர்சனமா?   

விடை எம் தமிழ் தேசத்தின் ஆசான், நெல்லைச் சீமையின் குல விளக்கு, எட்டையபுரத்துச் சித்தன், பாரதியிடம்........,

'வெறிகொண்ட தாய்' என்ற பாரதியின்  அமர கவிதையிலிருந்து,  உணர்வு நிலையில்  இச்சித்திரத்துடன்  ஒருங்கும் சில சாவா, மூவா வரிகளை  இங்கு இணைத்திட விழைகிறேன்......

பெரும் சக்தி தாசரான பாரதி, இக்கவிதையில், பாரத அன்னையைத்  தான் வழிபடும் மகா  காளியாகவே காண்கிறார்! 


'பேயவள் காணெங்க ளன்னை – பெரும்
     பித்துடையா ளெங்க ளன்னை
காயழ லேந்திய பித்தன் – தனைக்
     காதலிப்பாளெங்க ளன்னை.
........................
........................

பாரதப் போரெளிதோ? – விறற்
பார்த்தன்கை வில்லிடை யொளிர்வாள்
மாரதர் கோடிவந்தாலும்-கணம்
மாய்த்துக் குருதியிற் றிளைப்பாள்!'



~  ~  ~

No comments:

Post a Comment